முகப்பு தற்போதைய செய்திகள்
திருப்பத்தூரில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொன்ற கணவன் கைது
By DIN | Published On : 27th June 2020 09:36 AM | Last Updated : 27th June 2020 09:36 AM | அ+அ அ- |

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் தியாகி சிதம்பரனார் பகுதியைச் சேர்ந்த சேஷாசலம்(65) அவரது மனைவி மல்லிகா(60) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில், ஆத்திரம் அடைந்த சேஷாசலம் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த மல்லிகா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றார்
இதையடுத்து சேஷாசலத்தை திருப்பத்தூர் நகர காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.