முகப்பு தற்போதைய செய்திகள்
சீர்காழி அருகே சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 27th June 2020 03:03 PM | Last Updated : 27th June 2020 03:03 PM | அ+அ அ- |

வழுதலைக்குடி கிராமத்தில் சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராமத்தினர்.
சீர்காழி: சீர்காழி அருகே வழுதலைகுடி கிராமத்தில் சவுடுமண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் சுமார் 2 ஆண்டுகளாக தனியார் சவுடுமண் குவாரி அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இங்கு மழைகாலங்களை தவிர மற்ற நாட்களில் சவுடு மண் எடுத்து லாரிகளில் பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தை விட அளவிற்கு அதிகமான ஆழம் வெட்டி மண் எடுக்கப்படுவதாகவும்,வரக்கூடிய மழைகாலங்களில் ஆழமான பள்ளங்களில் மழைநீர் தேங்ககூடும் எனவும், அவ்வாறு தேங்கிய குட்டைகளின் ஆழம் தெரியாமல் அதன் அருகே விளையாடும் சிறுவர்கள் அதில் தவறி விழுந்து உயிரிழக்கும் ஆபத்துக்கூட ஏற்படலாம் எனக்கூறி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே கிராமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு அங்கு அதிக ஆழத்தில் மண் எடுத்ததால் தேங்கிய தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.1 மணிநேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தினை தொடர்ந்து சீர்காழி காவலர்கள், துணை வட்டாசியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.