செய்யாறு: 7 முதியோர்கள், 3 குழந்தைகள் உள்பட 51 பேருக்கு கரோனா

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 7 முதியோர்கள், 3 குழந்தைகள் உள்பட 51 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
செய்யாறு: 7 முதியோர்கள், 3 குழந்தைகள் உள்பட 51 பேருக்கு கரோனா



செய்யாறு:  செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 7 முதியோர்கள், 3 குழந்தைகள் உள்பட 51 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து தங்கியவர்கள், கரோனா தொற்று உடையவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்ட 619 பேருக்கு ஜூன் 26 சளி பரிசோதனை  செய்யப்பட்டது.  

பரிசோதனை முடிவில் செய்யாறு காமராஜர் நகர் பகுதியில் ஒரே குடும்பத்தில் மூவருக்கும், பாவாடைமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உள்பட மூவருக்கும், பசும்பொன் நகரில் இருவருக்கும், எல்லப்பா நகர், புதுத்தெரு, ஒத்தவைாடைதெரு, குமரன் தெரு, சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், செங்கம்பூண்டி கிராமத்தில் ஒரு பெண் உள்பட மூவருக்கும், அனக்காவூர், பல்லாவரம் ஆகிய கிராமங்களில் தலா ஒருவர் உள்பட 20 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

ஆரணி வட்டத்தில், ஆரணி பாளையத்தில் ஒரே குடும்பத்தில் இரு சிறுவர்கள் உள்பட 4 பேருக்கும், சைதாப்பேட்டையில் இரு முதியவர்கள், இரு பெண்கள் என 4 பேருக்கும், இரும்பேடு, விளை, ஆரணிபாளையம், கொசப்பாளையம், குடிசைக்கரை, மெழுகாம்பூண்டி, பல்லாந்தாங்கல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேருக்கும், வந்தவாசி வட்டத்தில் பொன்னூர், மருதாடு,தேசூர், மும்மனி, வந்தவாசி டவுன் உள்பட 9 பேர் உள்பட செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய அரசு மருத்துவமனை, செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பு கரோனா வார்டு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் சுகாதாரப்பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com