ராமேசுவரத்தில் மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது
By DIN | Published On : 27th June 2020 02:43 PM | Last Updated : 27th June 2020 02:43 PM | அ+அ அ- |

ராமேசுவரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் சந்திரன்(50) மீன்பிடி தொழிலாளி. இவரது மகன்கள் சதீஷ்(21), இருளேஸ்வரன் (20). நேற்றிரவு இருவருக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறை அவர்களது தாயார் விலக்கச் சென்றார்.
அப்போது சதீஷ் தாயை அடிக்கப் பாய்ந்தார். இதனை ஏன் தடுக்கவில்லை என தந்தை சந்திரனை மகன் இருளேஸ்வரன் தட்டிக்கேட்டார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருளேஸ்வரன், தந்தை சந்திரனை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றார். அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவில் வாசல் முன் கீழே தள்ளி தலையில் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
தகவலறிந்த ராமேஸ்வரம் துறைமுகம் காவலர்கள் இருளேஸ்வரனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.