கூத்தாநல்லூர்: ஒரு குடும்பத்திற்கு 5 முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

கரோனா தொற்று நோய்யை தடுப்பதற்காக, ஒரு குடும்பத்திற்கு 5 முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
கூத்தாநல்லூர்: ஒரு குடும்பத்திற்கு 5 முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

கரோனா தொற்று நோய்யை தடுப்பதற்காக, ஒரு குடும்பத்திற்கு 5 முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்று பெரும் அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள், மருத்துவர்கள்,காவல் துறையினர்கள், செவிலியர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் இரவு, பகல் பார்க்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். சீனா தந்த, வந்த வேலை முடிய வேண்டும் என்பதில் சீனா கரோனா கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது. பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கரோனா தொற்று பரவி, பாதிப்பின் எண்ணிக்கை 100, ஆயிரம் என லட்சத்தை தாண்டிக் கொண்டிருக்கிறது.

உயிரிழப்புகள் பல்லாயிரத்தையும் மிஞ்சி விட்டன. எதுவும் செய்ய முடியாமல், "கரோனாவின் முடிவு கடவுள் கையில்தான் " என அரசே சொல்லும் அளவுக்கு, கரோனாவின் ஆதிகம் அதிகமாகி விட்டது. 6 மாதங்களாகியும் ஒரு உலகத் தொற்றுக்கு மருந்தே கண்டு பிடிக்கப்படாமல், அனைவரும் அவஸ்தையில் இருப்பது கரோனாவுக்கு மட்டுமே தான் இருக்கும். கரோனாவுக்கு மருந்து, அவரவர்களின் கைகளும், முகக்கங்களும், வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியும்தான். 

ஆமாம், கைகளை நன்றாகக் கிருமி நாசினியையோ அல்லது சோப்பையோ பயன்படுத்தி கழுவ வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஒவ்வொருவரது உடலிலும் எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கக் கூடிய சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். வெந்நீர் குடிக்க வேண்டும். காலை, இரவு என இரண்டு வேலையும் கள்ளு உப்பு கலந்த உப்பு நீரால் வாயைக் கொப்புளிக்க வேண்டும். வெளியில் எங்கு சென்றாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவைகளை இன்னும் குறைந்தது 6 அல்லது ஒரு ஆண்டுக்கு பின்பற்றினால், நம்மை விட்டு கரோனா கட்டாயம் காணாமல் போய்விடும். 

பொதுமக்கள் இனி எப்பொழுதும் முகக்கவசங்கள் அணிய வேண்டிய நிர்பந்த நிலையை கரோனா ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தில் பல இடங்களில் பாதுக்காப்பில்லாத முகக்கவசங்கள், அதிக விலைக்கும் விற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, எஸ்.டி.பி.அய்.கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஹெச்.அப்துல் ராஜிக் கூறியது, கரோனா தொற்று நோய் உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டன. கரோனா தொற்று நோயிலிருந்து ஒவ்வொருவரும் தங்களைப் பாதுக்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், அரசும், மருத்துவர்களும் விதித்துள்ள விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். 

முகக்கவசம் அணியாமல் வெளியில் வரவேக் கூடாது. கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுக்காக்க,தமிழக அரசு, அங்காடிகளில் இரண்டு முகக்கவசமும், கபசுரக் குடிநீர் பவுடரும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஒரு குடும்பத்தில் குறைந்தது 4 அல்லது 5 பேராவது இருப்பார்கள். அப்படியிருக்கையில், தமிழக அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள, ஒரு குடும்பத்திற்கு இரண்டு முகக்கவசங்கள் என்பது போதுமானதல்ல. அதனால், அங்காடி மூலம், ஒரு குடும்பத்திற்கு 5 முகக்கவசங்கள் வழங்க வேண்டும்.

மேலும், முகக்கவசத்துடன், ஒரு சோப்பையும் சேர்த்து வழங்க வேண்டும். மேலும், திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முகக்க வசங்கள் பாதுக்காப்பில்லாமல் திறந்த வெளியிலேயே விற்கப்படுகிறது. அது போன்று விற்கப்படுவதை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com