களக்காடு புலிகள் காப்பகத்தில் 12 புலிகள், 4 சிறுத்தைகளின் கால் தடம் சேகரிப்பு                              

களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 1  வாரமாக நடைபெற்ற கணக்கெடுப்பில் 12 புலிகள் மற்றும் 4 சிறுத்தைகளின் கால்தடங்களும் மற்றும் எச்சங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. 
களக்காடு புலிகள் காப்பகத்தில் 12 புலிகள், 4 சிறுத்தைகளின் கால் தடம் சேகரிப்பு                              

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 1  வாரமாக நடைபெற்ற கணக்கெடுப்பில் 12 புலிகள் மற்றும் 4 சிறுத்தைகளின் கால்தடங்களும் மற்றும் எச்சங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. 

களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள களக்காடு, திருக்குறுங்குடி, மேல கோதையாறு ஆகிய மூன்று வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஜூன் 22 முதல் 28 வரை நடைபெற்றது. 

இதில் 12 புலிகள் மற்றும் 4 சிறுத்தைகளின் கால்தடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை இயக்குநர் மு. இளங்கோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 1 வாரமாக 21 பீட்களில் வனத்துறையைச் சேர்ந்த 21 குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் 12 புலி 4 சிறுத்தைகளின் கால்தடங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் புலி, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகளின் எச்சங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் டெராடூனில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உரிய ஆய்வுகளுக்குப் பின்னரே புலிகளின் எண்ணிக்கை குறித்த விபரம் தெரியவரும். 

பொதுவாக, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய புலிகள் கணக்கெடுப்பின் போது புலிகள் எண்ணிக்கை குறித்த முழுவிபரமும் தெரியவரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com