சிஏஏ, என்பிஆர்-க்கு எதிராக 'பேரவையில் தீர்மானம் தேவையில்லை: அஜித் பவார்

குடியுரிமை திருத்தச் சட்டம் , தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லை என தேசியவாத
சிஏஏ, என்பிஆர்-க்கு எதிராக 'பேரவையில் தீர்மானம் தேவையில்லை: அஜித் பவார்


மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லை என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனை கட்சி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் யாரும் எந்தவொரு பிரச்னையையும் சந்திக்க வேண்டியதில்லை என்று உறுதியளித்த அவர். இதனால் மகாராஷ்டிர பேரவையில் அவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்றார். 

பிகார் சட்டப்பேரவையில் என்ஆர்சியை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்காக பிகார் சூத்திரத்தை இங்கு பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றார். 

சிஏஏ, என்பிஆர் நடவடிக்கைகள் குறித்து வதந்தி பரப்பப்படுவதாகவும், ஆதலால் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். 

மேலும் பிருஹன்மும்பை மாநகராட்சியில் சிவசேனை முதலிடத்தில் உள்ளது, அவர்கள் எங்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும், ஆனால் வரவிருக்கும் பிருஹன்மும்பை மாநகராட்சி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 முதல் 60 இடங்களைப் பெற வேண்டும். 

தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டணி கட்சியினரைப் பற்றி தவறான எண்ணங்கள் அல்லது தவறான புரிதல்களைக் கொண்டிருக்கக்கூடாது, ஏனெனில் வரும் நாட்களில் நாம் எல்லாம் ஒன்றாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அஜித் பவார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com