தில்லி வன்முறை: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் 

தில்லி வன்முறைகள் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து  மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தில்லி வன்முறை: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் 

புதுதில்லி: தில்லி வன்முறைகள் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து  மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் தில்லியில் நடந்த வன்முறை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவகைளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதனை இரு அவைகளின் தலைவர்களும் நிராகரித்ததை அடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள்  திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ராகுல் காந்தி மற்றும் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் "அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்", "எங்கள் இந்தியாவை காப்பாற்றுங்கள்" போன்ற முழக்கங்களுடன் பதாகைகள் மற்றும் பலகைகளை எடுத்துச் சென்றனர். 

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பேசுகையில், தில்லி வன்முறை குறித்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் முதல் கோரிக்கை. அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பதிலளிக்க வேண்டும்" என்று தரூர் கூறினார் .

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் காந்தி சிலைக்கு முன்னால் வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறைகளுக்கு எதிராக கண்களை மூடிக்கொண்டு ஒரு புதிய போராட்டத்தை நடத்தினர்.

கடந்த வாரம் நான்கு நாட்கள் வடகிழக்கு தில்லியை உலுக்கிய வன்முறை சம்பவத்துக்கு இதுவரை குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறை ஆயுத சட்டத்தின் கீழ் 41 வழக்குகள் உட்பட 254 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com