மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்: ஆட்சியர் பா.பொன்னையா 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பிளஸ் 2 தேர்வினை 12281 மாணவ மாணவிகள் 50 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான
மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்: ஆட்சியர் பா.பொன்னையா 


காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பிளஸ் 2 தேர்வினை 12281 மாணவ மாணவிகள் 50 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தேர்வு மையத்தை பார்வையிட்ட பின் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கி வரும் 24ஆம் தேதி வரை துறை வாரியாக பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள், கட்டுபாடுகள் குறித்த விளக்கங்களை வழங்கி உள்ளது.

முதன் முறையாக இந்த ஆண்டு முதல் தேர்வு நேரம் 3 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களில் 5590 மாணவர்களும் 6691 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 281 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

இதற்காக வினாத்தாள்கள் வைக்கும் கட்டு காப்பு மையங்களாக ஏழு மையங்கள் செயல்பட உள்ளதாகவும் , எட்டு பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , மாவட்டத்தில் 90 சிறப்பு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதாகவும்,  அவர்களில் 26 மாணவர்கள் தேர்வு எழுத உதவியாக 26 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதுமட்டுமில்லாமல் மாணவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் , மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்தந்த தேர்வு மையங்களில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்..

செங்கல்பட்டு மாவட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 108  தேர்வு மையங்களில் 14531 மாணவர்களும் 18085 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 616 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக வினாத்தாள்கள் வைக்கும் கட்டு காப்பு மையங்களாக 15 மையங்கள் செயல்பட உள்ளதாகவும் , 12 பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , மாவட்டத்தில் 90 சிறப்பு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதாகவும் அவர்களில் 70 மாணவர்கள் தேர்வு எழுத உதவியாக 70 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com