கரோனா எதிரொலி: சென்செக்ஸ் 1851 புள்ளிகள் வீழ்ச்சி

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. 
கரோனா எதிரொலி: சென்செக்ஸ் 1851 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. 

திங்கள்கிழமை (மார்ச் 16) வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1851 புள்ளிகளும், நிஃப்டி 570 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1851 புள்ளிகள் சரிந்து 32,2252 ஆகவும், நிஃப்டி 524 புள்ளிகள் சரிந்து 9,430 ஆகவும் வர்த்தகமானது.

கரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com