கரோனா வைரஸ்: தெலங்கானா சிறைகளில் கைதிகளுடனான பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெலங்கானா மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகள்
கரோனா வைரஸ்: தெலங்கானா சிறைகளில் கைதிகளுடனான பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து

ஹைதராபாத்: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெலங்கானா மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தச்  சேவைகள் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுடனான பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  பெரும் வணிக வளாகங்கள் (மால்கள்), பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் கூடும் தேவையற்ற கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு கூட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வருவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்  கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தச்  சேவைகள் சிறைச்சாலைகளில் உள்ள  கைதிகளுடனான வழக்கான பார்வையாளர்களின் நேரிடையான சந்திப்பை ரத்து செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கை தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

வைரஸ் தொற்று அச்சம் மற்றும் கைதிகளின் நலன் காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் நேரில் சந்திக்க வரவேண்டாம் எனவும், இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை கைதிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com