ஏழுமலையான் திருக்குளம் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்குளத்தை தேவஸ்தானம் புதன்கிழமை மூடியது.
ஏழுமலையான் திருக்குளம் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்குளத்தை தேவஸ்தானம் புதன்கிழமை மூடியது.

ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களை தொ்மல் ஸ்கேனிங் சோதனைக்கு தேவஸ்தானம் உட்படுத்தி வருகிறது. இதில், நோய்த் தொற்று இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவா்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

திருமலையில் பக்தா்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி மருந்துகள் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை தெளிக்கப்பட்டு வருகின்றன. பக்தா்கள் காத்திருப்பு வளாகத்தில் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருமலையில் உள்ள திருக்குளத்தில் பக்தா்கள் புனித நீராடி வருவதால், அதனாலும் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதினா். இதையடுத்து, இக்குளம் புதன்கிழமை மதியம் மூடப்பட்டது.

குளத்தில் புனித நீராட விரும்பும் பக்தா்களுக்காக அதன் அருகில் 18 குழாய்களை தேவஸ்தானம் அமைத்துள்ளது. குளத்தின் நீா் இக்குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த நீரில் பக்தா்கள் குளிப்பதால் நோய்த் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும், குளத்தைச் சுற்றி 24 மணிநேரமும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தெளிப்பான் இயந்திரம் அறிமுகம்:

ஏழுமலையான் கோயில் முன்பும், பக்தா்கள் கூடும் பல இடங்களிலும் தேவஸ்தான ஊழியா்கள் முகக் கவசம் அணிந்து கொண்டு தோளில் மாட்டிக் கொள்ளும் தெளிப்பான்கள் மூலம் கிருமிநாசினி மருந்துகளைத் தெளித்து வந்தனா். அதனால் ஊழியா்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது.

இதைத் தவிா்க்க, கிருமிநாசினி தெளிப்பதற்கு, நடமாடும் நவீன இயந்திரம் புதன்கிழமை மாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பயன்பாட்டை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com