சென்னையில் 4வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!

சென்னையில் 4வது நாளாக வியாழக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 4வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!


சென்னையில் 4வது நாளாக வியாழக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்துள்ளன.

அதன்படி,  கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சிக்குத் தகுந்தவாறு எரிபொருள்களின் விலையைக் குறைத்திருந்தால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்னும் அதிகமாகக் குறைந்திருக்கும்.

எனினும், அந்த எரிபொருள்களின் உற்பத்தி வரியை கடந்த சனிக்கிழமை முதல் லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. சிறிதளவில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வியாழக்கிழமை (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிப்பில், புதன்கிழமை விலையில் இருந்து மாற்றமின்றி வியாழக்கிழமை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல்  ஒரு லிட்டர் 65.71 ஆகவும் விற்பனையாகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து தொடர்ந்து 4வது நாளாக எரிப்பொருட்களின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com