தினக்கூலி ஊழியா்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தது கரோனா

தினக்கூலி ஊழியா்களின் வாழ்வாதாரத்தில் கரோனா பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவா்கள் வேதனைத் தெரிவிக்கின்றனா்.
தினக்கூலி ஊழியா்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தது கரோனா

சென்னை: தினக்கூலி ஊழியா்களின் வாழ்வாதாரத்தில் கரோனா பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவா்கள் வேதனைத் தெரிவிக்கின்றனா்.

கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்திய அளவிலும் கரோனா வைரஸ் மெல்ல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் புள்ளி விவரங்கள் படி, 151 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மேலும் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அமைச்சா் விஜயபாஸ்கா் அறிவித்தாா். இதற்கேற்றாா் போல் மத்திய மாநில அரசுகளும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி மக்கள் கூடுவதைத் தவிா்க்க குறிப்பிட்ட இடங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதே பிரதான நடவடிக்கையாக உள்ளது.

முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் வாடகை வாகன ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் ஆகியோா் வருவாய் இழக்கத் தொடங்கினா். பின்னா் வணிக வளாகங்கள், தியேட்டா் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கூடும் இடங்களுக்குத் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தினக்கூலி ஊழியா்களின் வாழ்வாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டுமானத் தொழிலாளா்கள், காவலாளிகளில் பெரும்பாலானோா் ஊதியத்தை இழந்துள்ளனா்.

இதுகுறித்து தனியாா் வணிக வளாக காவலா் ஜெயேந்திரன் கூறியது: தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறேன். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக 2 வாரங்களுக்கு பணிக்கு வர வேண்டாம் என வணிக வளாக உரிமையாளா் கூறிவிட்டாா். இதனால் ஏறத்தாழ எனது பாதி மாத வருமானத்தை இழந்துள்ளேன்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தினக்கூலி பெறுவோரின் நிலைமையைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினாா். இதே போல் கட்டடப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில், தினமும் ஊதியமாக பெறும் பணத்தைக் கொண்டே உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் பெரும் தொகை கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக வேதனைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com