புணே: மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு 

கரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா மாநிலம் புணேவில் மாா்ச் 31-ஆம் தேதி வரையிலும் 144 போலீஸ்
புணே: மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு 

புணே (மகாராஷ்டிரா): கரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா மாநிலம் புணே மற்றும் புணே மாவட்டம் முழுவதும்  மாா்ச் 31-ஆம் தேதி வரையிலும் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கோ, கூட்டமாகச் செல்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவின்படி, புணே  மாவட்டம் முழுவதும் மார்ச் 31 வரையிலும் வரையிலும் ஆா்ப்பாட்டங்கள், ஊா்வலங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளன. சமூக, கலாசார, அரசியல், மத, கல்வி, விளையாட்டு, கருத்தரங்கு அல்லது மாநாடு உள்ளிட்ட எந்தவொரு கூட்டமும் அனுமதிக்கப்படாது. இந்த புதிய தடை உத்தரவு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். தடை உத்தரவுகளை மீறுபவா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-இன் கீழ் தண்டனைக்குள்ளாவா் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து நிறுவனங்களும் நகரத்தில் முழுமையாக மூடப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

புணே மாவட்ட கிராமப்புற பகுதிகளுக்கும் ஆட்சியர் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com