பொதுமக்கள் அவரது பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ள வேண்டும்: ஆட்சியர் சு.சிவராசு

பொதுமக்கள் அவரது பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ள வேண்டும். பொருள்கள் வாங்க திருச்சி காந்தி
பொதுமக்கள் அவரது பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ள வேண்டும்: ஆட்சியர் சு.சிவராசு


திருச்சி: பொதுமக்கள் அவரது பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ள வேண்டும். பொருள்கள் வாங்க திருச்சி காந்தி சந்தை செல்ல பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளதையடுத்து, 144 தடை உத்தரவை முழுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, மாநகர சாலைகளில் வாகனங்களிலோ, வீதிகளில் கூட்டாக சேருவோருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல், தடை உத்தரவு உள்ள நாள்களில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தில் காந்திசந்தை செயல்படும். அந்த நேரத்தில் வியாபாரிகள் மட்டும் பொருள்களை வாங்கிச்சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். காந்தி மார்க்கெட் சனி, ஞாயிறு நாட்களில் செயல்படாது. சில்லறை விற்பனையாளர்கள் மொத்தவிலை வியாபாரியிடமிருந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். காந்தி சந்தைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட்டில் சில்லறையில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. காந்தி சந்தைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகா், ஊரக பகுதிகளில் உள்ள 1,800 மளிகை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம்.

கட்டாயம் வியாபாரிகள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தே செல்லவேண்டும். முகக்கவசம் அணியாமல் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். சமூக விலகல் மூலமே பொருள்களை வாங்கவேண்டும். பால் உள்ளிட்ட அத்தியாவசிய, உணவு பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை உத்தரவு உள்ள வார நாள்களான மாா்ச் 28, 29, ஏப்ரல் 4, 5, 11, 12 ஆகிய 6 நாள்களும் காய்கறி மாா்கெட்டுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாள்களில் மாநகராட்சி ஊழியா்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடுவா். 

திருச்சியில் ஹோட்டல் கடைகள் இயங்கும்.அங்கு பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் மாா்ச் 1 முதல் மாா்ச் 25 வரை மொத்தம் 624 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதியிலிருந்து ரூ.40 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது என்றாா்.

திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய, கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமலான முதல் நாளிலேயே மத்திய மண்டல காவல்துறையினரின அதிரடி நடவடிக்கையில் 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com