அமெரிக்காவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்வு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் வூஹானில் தொடங்கிய வைரஸ் தொற்று இன்று சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்தியா என உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவில் கட்டுக்குள் வந்து வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளில் தீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில்  வைரஸ் தொற்றுக்கு 247 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 13,347 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,203 ஆக உயர்ந்துள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22.989 ஆக உயர்ந்துள்ளது. உயரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை 300 தாண்டியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com