குமரி மாவட்டத்தில் தேவையின்றி நடமாடுபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது சாலைகளில் தேவையின்றி நடமாடுபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 
குமரி மாவட்டத்தில் தேவையின்றி நடமாடுபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது சாலைகளில் தேவையின்றி நடமாடுபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குமரி மாவட்டத்தில் சாலைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் அனாவசியமாக வருபவர்களை முதல் முறையாக நாகர்கோவிலில் ட்ரோன் கேமிரா முறை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதனை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீ நாத் தொடங்கி வைத்தார். 

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ட்ரோன் கேமிரா முறையை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டம் வந்த 3600 பேர் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியே நடமாடினால் நிரந்தரமாக சிறைத்தண்டனை வழங்கப்படும். 

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறி சாலைகளில் அனாவசியமாக நடமாடிய 11பேர் மீது புதன்கிழமை ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் இருந்து கடல் மார்க்கமாக மீனவர்கள் சொந்த ஊருக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்த பின்னரே சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்  ஸ்ரீ நாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com