ராஜஸ்தானில் கரோனாவுக்கு முதல் பலி 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு ராஜஸ்தான் மாநிலம் பில்வாரவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்
ராஜஸ்தானில் கரோனாவுக்கு முதல் பலி 


பில்வாரா (ராஜஸ்தான்): உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு ராஜஸ்தான் மாநிலம் பில்வாரவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. 

"ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்ததாக மகாத்மா காந்தி மருத்துவமனையின் முதல்வர் ராஜன் நந்தா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து  மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது என்று ராஜஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூரின் ராம்கஞ்ச் பகுதியில் மிகவும் நெரிசலான பகுதி என்பதால் ஒரு கி.மீ சுற்றளவிற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com