பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவு: சக்திகாந்த் தாஸ்

சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார். 
பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவு: சக்திகாந்த் தாஸ்


புதுதில்லி: சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார். 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பாதிப்பு மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான 4 அம்ச திட்டங்களை அறிவித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறித்து ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5.5% ஆக இருந்த வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 0.7% குறைக்கப்பட்டு 4.4% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையவும், வாடிக்கையாளர்களின் மாதந்திர தவணை குறைய வாய்ப்புள்ளது. 

மேலும் தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க இயலும். சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்.  

3 மாத தவணைகள் தள்ளி வைப்பு: வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாங்கிய அனைத்து வகையான கடனுக்கான 3 மாத தவணைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு நடவடிக்கையால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் தவணைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து செலுத்த வேண்டும். மேலும் 3 மாத தவணைக்கான வட்டியையும் ரிசர்வ் வங்கி தள்ளி ஒத்திவைத்துள்ளது. 

4 அம்ச திட்டங்கங்கள்: 
*  போதுமான நிதி சந்தையில் இருப்பதை உறுதி செய்வது
* வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு
* கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நெருக்கடியை குறைப்பது
*  சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com