வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு: ரிசர்வ் வங்கி 

ரெப்போ விகிதம் 5.15 5 சதவீதத்தில் இருந்து - 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 
சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

ரெப்போ விகிதம் 5.15 5 சதவீதத்தில் இருந்து - 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 

கரோனா பாதிப்பு குறித்து ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வரும் சக்திகாந்த தாஸ், கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5.5% ஆக இருந்த வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 0.7% குறைக்கப்பட்டு 4.4% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையவும், வாடிக்கையாளர்களின் மாதந்திர தவணை குறைய வாய்ப்புள்ளது. 

மேலும் தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க இயலும் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com