நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

 
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கரோனா வார்டில் அனுமதிக்கப்படிருந்தவர்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளார். ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என்றும் இறந்தவர்களுக்கு உடல்நிலை சாா்ந்த வேறு பிரச்னை இருந்ததாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவா், ஓா் இளைஞா், ஒரு குழந்தை என 3 போ் சனிக்கிழமை இறந்தனா். அவா்கள் இறப்புக்கு என்ன காரணம் என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என மருத்துவக் கல்லூரி முதன்மையா் தெரிவித்தாா்.

வெளிநாடு சென்று திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்புடையவா்கள் என குமரி மாவட்டத்தில் மொத்தம் 4,844 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மட்டும் 15 போ் கரோனா வாா்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில், 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கேரளத்தில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்த, ராஜாக்கமங்கலம்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த மரியஜான் (66), ஊா்திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாா். சவூதி அரேபியாவில் பணியாற்றிய இவரது மகன் கடந்த 13-ஆம் தேதி ஊா் திரும்பினாா். இதைத் தொடா்ந்து, மரியஜானுக்கு தொடா் காய்ச்சல், இருமல் இருந்ததால் நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் கடந்த 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா்.

இதேபோல, இந்த வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முட்டத்தைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, திருவட்டாறைச் சோ்ந்த 24 வயது இளைஞா் ஆகிய 2 போ் சனிக்கிழமை காலை உயிரிழந்தனா்.

இந்நிலையில்,  கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமிநாதபுரத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். 

அவா் இறப்புக்கு என்ன காரணம் என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை கரோனா நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் 50 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 33 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு வீடு திரும்பினா். மேலும், 17 போ் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு இதுவரை 6 போ் இறந்துள்ளனா். 

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையத்தை உடனே அமைக்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com