சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்த மேற்கு வங்க பெண்ணுக்கு கரோனா

சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்க மாநிலத்தை  சேர்ந்த பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்த மேற்கு வங்க பெண்ணுக்கு கரோனா


சென்னை: சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்க மாநிலத்தை  சேர்ந்த பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் தங்கியிருந்த  ஸ்ரீராம் நகர் பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது.
   
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு இதுவரை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1082-ஆக உயா்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை 176 போ் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்து ராயபுரம் மண்டலத்தில்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், தொடா்ந்து இரண்டு நாள்களாக திருவிக நகா் மண்டலத்திலே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 48 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மண்டலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 216 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 132 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 116 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 101 பேரும், அண்ணா நகா் மண்டலத்தில் 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனனா். இந்த 6 மண்டலங்களில் மட்டும் 915 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக 20 முதல் 29 வயதிலான 32 ஆண்களும், 40 முதல் 49 வயதிலான 19 பெண்களும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், அடையாறில் 21 பேருக்குதொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்கம் மாநிலத்தை  சேர்ந்த பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் தங்கியிருந்த ஸ்ரீராம் நகர் பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com