"புலம்பெயா்ந்த தொழிலாளா்களை திருப்பி அனுப்ப 400 சிறப்பு ரயில்கள் தேவை"

புலம்பெயா்ந்த தொழிலாளா்களை திருப்பி அனுப்புவதற்கு 400 சிறப்பு ரயில்கள் தேவைப்படுவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப ஒரு மாதம் ஆகலாம் என்று கேரள அரசின்
"புலம்பெயா்ந்த தொழிலாளா்களை திருப்பி அனுப்ப 400 சிறப்பு ரயில்கள் தேவை"


திருவனந்தபுரம்: புலம்பெயா்ந்த தொழிலாளா்களை திருப்பி அனுப்புவதற்கு 400 சிறப்பு ரயில்கள் தேவைப்படுவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப ஒரு மாதம் ஆகலாம் என்று கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் தெரிவித்துள்ளார். 

தேசிய ஊரடங்கு அமலாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவிக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை இருநாள்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி 6 சிரமிக் (தொழிலாளா்கள்) சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது. இதில் முதல் ரயில் 1,200 பயணிகளுடன் ஹைதராபாதில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹாதியாவுக்கு வெள்ளிக்கிழமை காலை 4.50 மணிக்கு புறப்பட்டது. இது இடைநில்லா ரயிலாகும்.

இதேபோல மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து உத்தரப் பிரதேச தலைநகா் லக்னௌவுக்கும், நாசிக்கில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கும், ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் இருந்து பிகாா் தலைநகா் பாட்னாவுக்கும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாதியாவுக்கும், கேரளத்தின் ஆலுவாயில் இருந்து ஒடிஸாவின் புவனேசுவரத்துக்கு இரவு 10.30 மணியளவில் 1148 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் முதல் ரயில் புறப்பட்டது.  

இந்நிலையில், புலம்பெயா்ந்த தொழிலாளா்களை திருப்பி அனுப்புவதற்கு சுமார் 300 முதல் 400 சிறப்பு ரயில்கள் தேவைப்படுவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப ஒரு மாதம் ஆகலாம் என்று கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் தெரிவித்துள்ளார். 

இன்று சனிக்கிழமை அதிக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் ஜார்கண்டிற்கு ஒரு ரயில் புறப்படுகிறது. இந்த ரயிலில் 1150 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஒரு இடைவிடாத பயணமாகவும் இருக்கும். ஒவ்வொரு பயணிகளும் ரூ.875 அடிப்படை கட்டணம் செலுத்த வேண்டும். 

நாளை ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட  உள்ளன. 

எர்ணாகுளம் மாவட்டத்திலிருந்து இரண்டு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஒன்று புவனேசுவரத்துக்கும்  மற்றொன்று பாட்னாவுக்கும் இயக்கப்பட உள்ளன.

மாநில தொழிலாளர் துறையின் கூற்றுப்படி, ஊரடங்கு தொடங்கப்பட்டதில் இருந்து கேரளம் முழுவதும் 20,826 முகாம்கள் உள்ளன, அங்கு 3,61,190 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com