ஆக்ராவில் மேலும் 22 பேருக்கு கரோனா: பாதிப்பு 501; பலி 15

ஆக்ராவில் சனிக்கிழமை புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ஆக்ராவில் மேலும் 22 பேருக்கு கரோனா: பாதிப்பு 501; பலி 15

ஆக்ரா:  ஆக்ராவில் சனிக்கிழமை புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கரோனா நோய்த்தொற்றால் வெள்ளிக்கிழமை புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 501-ஆக உயர்ந்துள்ளது, குணமடைந்தோரின் எண்ணிக்கை 126-ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7000 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஒன்பது புதிய ஹாட்ஸ்பாட் பகுதிகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சிவப்பு மண்டலத்தில் இருக்கும் ஆக்ரா, இப்போது முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பொதுமக்களின் மருத்துவ உதவிக்கான வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, கரோனா அல்லாத நோயாளிகளுக்காக எஸ்.என் மருத்துவக் கல்லூரி அவசர வார்டை  திறந்ந்துள்ளது. கண்டிப்பாக கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றிய பின்னர், தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மருத்துவ சேவைகளை வழங்குமாறு மாவட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com