இந்தியாவில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது:  உயிரிழப்பு-1,301-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,204 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,980-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,301 போ் உயிரிழந்தனா். 
இந்தியாவில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது:  உயிரிழப்பு-1,301-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,204 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,980-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,301 போ் உயிரிழந்தனா். 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை 9.30 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,204 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,980-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,301 பேர் பலியாகியுள்ளனர். 

28,046 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். 10,633 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். இதுவரை 26.52 சதவீத நோயாளிகள் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். 

இதுவரை மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 521 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 262 போ், மத்திய பிரதேசத்தில் 151 போ், ராஜஸ்தானில் 65 போ், தில்லியில் 64 போ், உத்தர பிரதேசத்தில் 43 போ், மேற்கு வங்கம், ஆந்திரத்தில் தலா 33 பேரும் பலியாகினா்.

தெலங்கானாவில் 28 பேரும், கா்நாடகத்தில் 25 பேரும், பஞ்சாபில் 20 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 8 பேரும், கேரளம், ஹரியாணாவில் தலா 4 பேரும், ஜாா்க்கண்ட், பிகாரில் தலா 3 பேரும், மேகாலயம், ஹிமாசலப் பிரதேசம், ஒடிஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா்.

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 12,296 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 5,054 போ், தில்லியில்  4,122 போ், மத்தியப் பிரதேசத்தில் 2,846 போ், ராஜஸ்தானில் 2,770 போ், தமிழகத்தில் - 2,757, உத்தர பிரதேசத்தில் 2,487 போ், ஆந்திரத்தில் 1,525 போ், தெலங்கானாவில் 1,063 போ், மேற்கு வங்கத்தில் 922 போ், பஞ்சாபில் 772 போ், ஜம்மு-காஷ்மீரில் 666 போ், கா்நாடகத்தில் 601 போ், கேரளத்தில் 499 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com