விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 5.50 கோடி ஒரே நாளில் மது விற்பனை
By DIN | Published On : 08th May 2020 11:26 AM | Last Updated : 08th May 2020 11:26 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் 226 மதுக்கடைகள் உள்ளன. இதில் கரோனா உள்ள திண்டிவனம், விழுப்புரம், அரகண்டநல்லூர் பகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 155 டாஸ்மாக் மதுக்கடைகள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட்டது.
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஏராளமான குடி பிரியர்கள் திரண்டு வந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் வெயிலில் காத்திருந்த மதுபானங்களை வாங்கி சென்றனர்.
இந்த வகையில் வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இது கடந்த காலங்களில் முழு அளவில் திறக்கப்பட்ட கடைகளில் விற்பனை விட இரு மடங்கு ஆகும். இன்றும் மதுக்கடைகளில் கூட்டம் வந்து சேர்ந்துள்ளது.