Enable Javscript for better performance
கோயம்பேடு சந்தை தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுக்க முடியாது: அமைச்சர் ஜெயகுமார்- Dinamani

சுடச்சுட

    

    கோயம்பேடு சந்தை தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுக்க முடியாது: அமைச்சர் ஜெயகுமார்

    By DIN  |   Published on : 15th May 2020 01:29 PM  |   அ+அ அ-   |    |  

    jayakumar


    சென்னை: கோயம்பேடு சந்தை தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

    சென்னை பட்டினம்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோயம்பேடு சந்தை தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது. தொற்று ஏற்பட்டதும் அரசு துரிதமாக செயல்பட்டு அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் முடிவு எடுத்தது. வியாபாரிகளிடம் 3 இடங்களில் சந்தையை பிரித்து வைத்து நடத்துமாறு கூறினோம். இதுதொடர்பாக வியாபாரிகள் பிரதிநிதிகளுடன் துணை முதல்வரும் ஆலோசனை நடத்தினார். பின்னர் 5 நாள்களில் கோயம்பேடு சந்தையை மாற்றினோம் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai