Enable Javscript for better performance
மானாமதுரையில் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து 19 பேர் தப்பியோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரையில் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து 19 பேர் தப்பியோட்டம்

    By DIN  |   Published on : 15th May 2020 01:42 PM  |   அ+அ அ-   |    |  

    Corona_Test_123


    மானாமதுரை: மகாராஷ்டிரம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து வெள்ளிக்கிழமை காலை ராமநாதபுரம் வந்த கூலித் தொழிலாளர்கள் 20 மருத்துவ பரிசோதனைக்கு பயந்து மானாமதுரையில் பேருந்தை நிறுத்தி தப்பியோடினர். இவர்களில் 10 பேரை காவலர்கள் பிடித்து மீண்டும் அதே பேருந்தில் ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். 

    மகாராஷ்டிரம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து ராமநாதபுரத்துக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மேற்கு வங்கத்தில் வேலை பார்த்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் வந்தனர்.மேலும் ந்த பேருந்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்களும் இருந்தனர். முதலில் சிவகங்கை சென்ற பேருந்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை இங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக இறக்கிவிட்டுவிட்டு அதன்பின்னர் ராமநாதபுரத்துக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. மானாமதுரை பைபாஸ் சாலையில் உள்ள ரயில்வேகேட் பகுதியில் வந்தபோது பேருந்தில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 20 பேர் மேற்குவங்க மாநிலத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் பேருந்தை நிறுத்தச் சொல்லி கரோனா பரிசோதனைக்கு பயந்து  தப்பியோடிவிட்டனர். அதன்பின் இவர்களை ஏற்றி வந்த பேருந்து மானாமதுரையிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மானாமதுரை பகுதியில் பல இடங்களில் சுற்றித்திருந்து தப்பிச் சென்ற பெண்கள் உள்ளிட்ட 10 பேரை பிடித்து அவர்கள் வந்த பேருந்தில் ஏற்றி ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுவரை சிக்காமல் உள்ள மேலும் 10 தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai