Enable Javscript for better performance
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு: 18 ஆம் தேதி முடிவு செய்யப்படும் - கே.ஏ.செங்கோட்டையன்- Dinamani

சுடச்சுட

    

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு: 18 ஆம் தேதி முடிவு செய்யப்படும் - கே.ஏ.செங்கோட்டையன்

    By DIN  |   Published on : 15th May 2020 11:21 AM  |   அ+அ அ-   |    |  

    senkottaian

    கோபி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு வழங்குவது குறித்து 18 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.   

    ஈரோடு மாவட்டம்  நம்பியூர் பகுதியில் 60,0000 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடந்தது.  இதனை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

    பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மையங்கள் சுத்தப்படுத்தப்பட்டு  கிருமி நாசினி தெளித்து மாணவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாணவா்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என முதல்வா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அந்தப் பகுதியிலேயே தோ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்குவது குறித்து 18 ஆம் தேதி நடைபெறும் ஆலோனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்.

    12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினா் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அவா்கள் விருப்பப்பட்டால் திருத்தலாம் என்றும், இதனால் விடைத்தாள் திருத்தும் பணி எந்த விதத்திலும் பாதிக்காது.

    மாணவா்களின் நலன் கருதி கடின முயற்சி எடுத்து தோ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவா்களின் பாதுகாப்பிற்கு எந்தவித குறையும் ஏற்படாது எனவும் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai