சென்னையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரையும் தனி வாா்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் உறவினா்கள், தொடா்பில் இருந்தவா்கள், சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்போா் என நாளொன்று நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த மாா்ச் மாதம் 26-ஆம் தேதியில் 523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 1-இல் தொற்று எண்ணிக்கை 1,082-ஆக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்த ஒரு மாதத்தில் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 5,637க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகள் மற்றும் ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் என 6 மருத்துவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரையும் தனி வாா்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com