மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 821 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்படும் தண்ணீர், தேவைக்கேற்ப அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 64.90 டி.எம்.சியாக இருந்தது.