பிரான்ஸ்: கடந்த 24 மணி நேரத்தில் 104 பேர் பலி

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 104 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27,529 ஆக உயர்ந்துள்ளது,
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாரிஸ்:  பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 104 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27,529 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொற்று பாதித்தோரில் மருத்துவமனைகளில் 17,342 பேர், நர்சிங் ஹோம் மற்றும் பிற மருத்துவ-சமூக நிறுவனங்களில் 10,187 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 19,861 பேர் தொற்று பாதிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,203 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில வாரங்களாக படிப்படியாக பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. 

பிரான்சில் இதுவரை 1,41,919 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60,448 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அமைதியின் அறிகுறிகளைக் காண்பிக்கும் அதே வேளையில், பிரான்ஸ் திங்கள்கிழமை முதல் படிப்படியாக வெளியேறி வருகிறது.

2020 ஆம் ஆண்டில் பிரான்சில் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பிற காரணங்களால் 1,33,678 பேர் இறந்துள்ளனர். இது 2019 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 22 சதவீதமும், 2018 ஐ விட 14 சதவீதமும் அதிகம் என்று தேசிய புள்ளிவிவர நிறுவனம் கூறியுள்ளது.

பிரான்சில் 2020 ஆம் ஆண்டு 133,678 பேரும், 2019 இல் 1,09,265 பேரும், 2018 இல் 1,17,018 பேரும் இறந்துள்ளனர் என்று தேசிய புள்ளிவிவர நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com