பணி சுமையால் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறை ரயில்வே இருப்பு பாதை பிரிவு கிளார்க் காசிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன் முடிவுக்கு பணி சுமை காரணம் என எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி காவலர்கள்
பணி சுமையால் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறை ரயில்வே இருப்பு பாதை பிரிவு கிளார்க் காசிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன் முடிவுக்கு பணி சுமை காரணம் என எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில்வே இருப்பு பாதை ஆய்வாளர் அலுவலகத்தில் கிளார்க் ஆக பணியாற்றி வந்தவர் காசிநாதன். இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் விருதுநகர் பகுதியில் பதவி உயர்வு மாற்றல் பெற்று மணப்பாறை வந்துள்ளார். அங்குள்ள ரயில்வே காலனியில் வசித்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி, 6 வயது மகன் சிவசரவணப்பாண்டி, 11 வயது மகள் சிவஸ்ரீ ஆகியோர் விருதுநகரில் இருந்து வரும் நிலையில், காலனி வீட்டில் தனியாக இருந்து வந்த காசிநாதன் வெள்ளிக்கிழமை காலை முதல் மனைவியின் செல்போன் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. மாலையில் இருப்பு பாதை ஆய்வாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட கிருஷ்ணவேணி கணவர் குறித்து தகவல் கேட்டு விசாரித்துள்ளார். இதனையடுத்து அலுவலக ஊழியர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு காசிநாதன் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிய வந்ததது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் காசிநாதன், எலக்ட்ரிக்கல் வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. வயர் அறுந்து உடல் கீழே விழுந்த நிலையில் இருந்த சடலத்தில் ரத்தம் உடலின் கீழ்பாகம் முழுவதும் இருந்ததால் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் அதிகாரிகள், மோப்ப நாய் ஸ்பார்க் ஆகியோர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து வீட்டிலிருந்து, தன் முடிவுக்கு பணி சுமையே காரணம் என எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ள மணப்பாறை காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பணி சுமையால் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ரயில்வே பணியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுபத்தி  உள்ளது. 

இச்சம்பவம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர், ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com