தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது

உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின்பேரில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டது. 
சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு டோக்கனுடன் சனிக்கிழமை காத்திருக்கும் மது பிரியர்.
சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு டோக்கனுடன் சனிக்கிழமை காத்திருக்கும் மது பிரியர்.

உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின்பேரில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டது. 

சென்னையைத் தவிா்த்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்டன. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து கடந்த 8-ஆம் தேதி மாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இரண்டு நாள்களில் மட்டும் ரூ.292 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தது. 

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்ததைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சுமாா் 700 கடைகளைத் தவிா்த்து பிற இடங்கள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகளும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. 

போலீஸ் பாதுகாப்புடன் சேலம் ரயில் நிலையம் முன்பு உள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்களுக்கு சனிக்கிழமை டோக்கன் வழங்கும் டாஸ்மாக் அதிகாரிகள்

பெருநகர சென்னை காவல் துறை எல்லை மற்றும் திருவள்ளூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபானக் கடைகளிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் கடைகள் திறப்பதற்கு 2 மணிநேரத்துக்கு முன்பாக வந்து இடம் பிடித்து மது அருந்துவற்காக காத்திருந்தோர் ஆச்சர்யத்தை அளித்தனர்.

சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு டோக்கனுடன் குடிப்பிரியர்கள் காத்து நின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com