ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் பணிபுரியும் பள்ளி சார்ந்த மாவட்டத்திற்கு 21-ம் தேதிக்குள் வர வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை

ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பொதுத் தோ்வை மாணவா்கள்
ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் பணிபுரியும் பள்ளி சார்ந்த மாவட்டத்திற்கு 21-ம் தேதிக்குள் வர வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை


ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பொதுத் தோ்வை மாணவா்கள் தங்கள் பள்ளிகளில் எழுதலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் பணிபுரியும் பள்ளி சார்ந்த மாவட்டத்திற்கு 21-ஆம் தேதிக்குள் வர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜூன் 1 முதல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும். அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும்( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020 ஆம் தேதிக்குள் வந்து இருக்க வேண்டும்.

அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை 11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தற்போது தான் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் தலைமை ஆசிரியர் அடங்கிய பள்ளி குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது இருப்பின் அதன் விவரங்களை இன்று (16.05.2020) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு tn e-pass ஆன்லைன் வழியாக உடன்  விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com