சேவா பாரதி: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஹோமியோபதி மருந்து

சேவாபாரதி தமிழ்நாடு கடலூர்  மாவட்டம் சார்பாக கரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி
சேவா பாரதி: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஹோமியோபதி மருந்து

சிதம்பரம்: சேவாபாரதி தமிழ்நாடு கடலூர்  மாவட்டம் சார்பாக கரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மருந்தினை கடலுார் மாவட்டத்தில் 3 லட்சம் பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக இந்த வாரத்தில் மட்டும் 30, 000 பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  துணைவேந்தர் முனைவர் வே. முருகேசன் சனிக்கிழமை பல்கலைக் கழக ஊழியர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

பின்பு சேவாபாரதி மாவட்டத் தலைவர் பேராசிரியர் பாலமுரளி, மாவட்ட செயலாளர் வேல்முருகன், மருத்துவர்கள்  டாக்டர் எம்.ராமதாஸ் மற்றும் டாக்டர் டி. சந்திரசேகரன் ஆகியோருடன்  இம்மருந்தினை பல்கலைக்கழக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர்,வங்கி ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் மருத்துவர்கள்,கொரோன வைரஸ் தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நபர்கள் ஆகியோருக்கு வழங்கினர்.

விழாவில்  இயக்குநர் முனைவர் வி. அருட்செல்வன் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் முனைவர் ஆர்.சரவணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் யு.வி.சண்முகம், டாக்டர் பாரி ஆகியோர் கலந்து கொண்டரை்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com