பங்களாதேஷில் மேலும் 930 தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது

பங்களாதேஷில் மேலும் புதிதாக 930 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20,995 -ஆக உயர்ந்துள்ளது
பங்களாதேஷில் மேலும் 930 தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது


டாக்கா: பங்களாதேஷில் மேலும் புதிதாக 930 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20,995 -ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16 இறப்புகளுடன், தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 314 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பங்களாதேஷில் ஞாயிற்றுக்கிழமை வரை 4,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேலும், தெற்காசிய நாடுகளில் இதுவரை மொத்தம் 1,67,114 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. 

ஐ.இ.டி.சி.ஆர் அறிவிப்பின் படி, நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள். 

இதற்கிடையில், கரோனா தொற்று பாதிப்பு பொது முடக்கம் காரணமாக நாட்டின் வறுமை விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"பங்களாதேஷில் வறுமை விகிதம் 20 சதவீதத்திற்கு மேல் உள்ளது. ஆனால் பொது முடக்கம் மூன்று மாதங்கள் நீடித்தால், வறுமை விகிதம் 41 சதவீதம் வரை உயரக்கூடும், இது கடந்த தசாப்தத்தின் அரசாங்கத்தின் சாதனைகளை அழித்துவிடும்" என்று சலிம் ரைஹான், தெற்காசிய நெட்வொர்க் ஆன் எக்னாமிக் மாடலிங் நிர்வாக இயக்குநர் டாக்கா ட்ரிப்யூன் மேற்கோடிட்டு காட்டியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com