ஆந்திரத்தில் தொற்று பாதிப்பு 2,230 ஆக உயர்வு

ஆந்திரத்தில் தொற்று பாதிப்பு 2,230 ஆக உயர்வு

ஆந்திரத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,230 ஆக உயர்ந்துள்ளது. முதல் முறையாக, ஆந்திரம் இந்த வாரத்தில் மிகக் குறைந்த


அமராவதி:  ஆந்திரத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,230 ஆக உயர்ந்துள்ளது. முதல் முறையாக, ஆந்திரம் இந்த வாரத்தில் மிகக் குறைந்த தொற்று பாதிப்பை உறுதி செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இதுவரை 9,880 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, எந்த மாவட்டங்களும் இரட்டை இலக்க தொற்று பாதிப்பை  உறுதி செய்யவில்லை. 

மேலும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 747 ஆக குறைந்துள்ளது. இதுவரை,1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் மட்டும் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 7 பேரும், ஹாட்ஸ்பாட் மாவட்டமான கர்னூல் மாவட்டத்தில் 3  பேர், இதில் ஒருவர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர். நெல்லூர் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரும் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர், சித்தூர் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட  4 பேர்களில் ஒருவர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. குண்டூர் மாவட்டத்தில் 4 பேர், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கர்னூல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொற்று பாதித்தோரின் 611 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் கிருஷ்ணா மாவட்டத்தின் மொத்த தொற்று எண்ணிக்கை 367 ஆக உள்ளது. 

மாநிலத்தின் 13 மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமை 6 மாவட்டங்களில் ஒரு தொற்று பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு பலியாகி உள்ள நிலையில்,  மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com