துப்பாக்கிச் சூடு: ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது - மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்
துப்பாக்கிச் சூடு: ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது - மு.க.ஸ்டாலின்


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அடியோடு அகற்ற வேண்டும் என அம்மாவட்ட மக்கள், 2018 இல் நடத்திய தொடர் போராட்டத்தின் 100-வது நாள் நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டம்  மே 22 ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம். 

இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினரால், ஈவு இரக்கமின்றி 13 அப்பாவி மக்கள் சுட்டு  கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ரத்தம் காய்ந்துவிட்டாலும், கொடுங்காயங்கள் ஆறினாலும், வடு மட்டும் மாறவில்லை. 

சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் எதிரி நாட்டு ராணுவத்தைப் போல நடத்திய குண்டு வேடையின் சத்தம் இன்னும் எதிரொலிக்கிறது. தூத்துக்குடி மக்களின் உறக்கத்தை அனுதினமும் கலைக்கிறது. 

நானே மீடியாவைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்று பொய்யைச் சொன்ன முதல்வரின் கல் நெஞ்சத்தை மக்கள் இன்னமும் மறக்கவில்லை. 

நூறு நாள்கள் அமைதியாகப் போராடிய மக்களைக் கலைக்க வன்முறைய விதைத்து ஏதுமறியாத 13 பேர் உயிர்களை பலி கொண்ட நாள் இன்று.

இந்தப் பழியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பழனிசாமி அரசினால் துடைத்துக் கொள்ள முடியாது. அவர்களின் கரங்களில் உள்ள ரத்தக் கறை கடல் நீர் முழுவதையும் கொண்டும் கழுவினாலும் போகாது.

விசாரணை ஆணையம் என்ற நாடகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை இன்னமும் வரவில்லை. அந்த ஆணையம் உண்மையில் சுட்டிக் காட்ட வேண்டிய குற்றவாளிகள் கோட்டையில் அல்லவை இருக்கிறார்கள்

'இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22. தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது! அதிமுகஸ்டெர்லைட் கொலையின் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது!' என பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com