அமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடி 

அமெரிக்காவில் அடுத்த மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடி 


வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் அதிகமான பாதிப்பும், பலியும் நிகழந்துள்ளது. அங்கு இதுவரை 16,20,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 96,354 பேர் பலியாகியுள்ளனர். 3,82,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி ஊழியர்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பாதிப்பால் நாங்கள் 96,354 பேரை இழந்துள்ளோம். அவர்களின் நினைவாக அடுத்த மூன்று நாள்களுக்கு அனைத்து மத்திய அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் நாட்டிற்கு சேவை செய்து உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவு நாளையொட்டி அவர்களை கௌவுரவிக்கும் வகையில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்’ என டிரம்ப் கூறியுள்ளார். 

கரோனா தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டவுள்ள இந்த சோகமான நாளில், அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com