அம்மாபேட்டை ஒன்றியத்தில் ரூ 2.40 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

பவானி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ 2.40 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
அம்மாபேட்டை ஒன்றியத்தில் 2.10 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன்.
அம்மாபேட்டை ஒன்றியத்தில் 2.10 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன்.

பவானி: பவானி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ 2.40 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

மாணிக்கம்பாளையம், சிங்கம்பேட்டை, பூதப்பாடி குருவரெட்டியூர், பட்லூர், ஒட்டபாளையம் ஆகிய ஊராட்சிகளில் கான்கிரீட் தடுப்பணை அமைத்தல், சாலை பலப்படுத்துதல், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுதல் உள்பட ரூ.2.40 கோடி மதிப்பிலான 10 பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.

மேலும், மேட்டூர் மேற்குக்கரை வாய்க்காலில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.29.90 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுசீலா, சுந்தரவடிவேல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவராஜ் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com