திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில்10 ஆயிரம் மையங்கள்,திருச்சி மாவட்டத்தில் 500 மையங்களில் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் மத்திய அரசின் சதியை முறியடிக்க மே 22-ல் அனைத்து தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது இருந்தனர்.

அதன்படி 8 மணி நேர வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யக் கூடாது, புதிய மின்சாரசட்டமசோதாவை கைவிட வேண்டும், அரசுகள் உத்திரவுபடி பொதுமுடக்க காலத்திற்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, நிலுவைதொகை வழங்க மறுக்கும் முடிவை கைவிட வேண்டும். பொதுமுடக்க காலத்திற்கு  மாதம் தோறும் ரூ7500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கருப்புக்கொடி பிடித்து, கருப்புப்பட்டை அணிந்து சங்ககொடியேந்தி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் மாவட்ட செயலர்கள் குணசேகரன் (தொமுச), ரங்கராஜன் (சிஜடியு), க.சுரேஷ் (ஏஐடியுசி), கே.துரைராஜ் (ஐஎன்டியுசி), ஜான்சன்(ஹெச்எம்எஸ்) உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com