ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைப்பு: சக்திகாந்த தாஸ்

ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைப்பு: சக்திகாந்த தாஸ்

மும்பை: ரெப்போ ரேட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காவது முறையாக பொது ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழை மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதில்,  ரெப்போ ரேட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம்  4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதோபோல் வங்கிகள் தங்கள் பணத்தை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் போது அளிக்கப்படும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பால் வீடு மற்றும் வாகன கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com