Enable Javscript for better performance
எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு: திமுக எம்.பிக்கள் முன்ஜாமீன் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு: திமுக எம்.பிக்கள் முன்ஜாமீன் கோரி மனு

    By DIN  |   Published on : 23rd May 2020 01:37 PM  |   அ+அ அ-   |    |  

    chennaihighcourt


    சென்னை: தங்களுக்கு எதிராக  எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    திமுகவின் சார்பில் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு , தயாநிதி மாறன் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினர். இந்த சந்திப்புக்குப் பின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்,  தாங்கள் மூன்றாம் தர மக்கள் போல் நடத்தப்பட்டதாகவும், தாங்கள் என்ன தாழ்த்தப்ட்டவர்களா என சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர், கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி,  திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

    அந்த மனுவில், யாரையும் புண்படுத்தும் நோக்கில் தாங்கள் கருத்து கூறவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சனிக்கிழமை காலை தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் கைதான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai