சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி

கரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் , கரோனா அல்லாத மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள்,
சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி


புதுதில்லி: கரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் , கரோனா அல்லாத மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்து உள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி, கரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள்தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் கரோனா அல்லாத மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் எச்.சி.க்யூ-இன் பயன்பாட்டை விரிவுபடுத்த முடியும் என்றும், கரோனா அல்லாத மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள், தொழிலாளர்கள், காவலர்கள், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணிபுரியும் பாதுகாப்புப் படையினர் மற்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. 

டி.ஜி.எச்.எஸ் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் குழு கூட்டத்தில் எய்ம்ஸ், ஐ.சி.எம்.ஆர், என்.சி.டி.சி, என்.டி.எம்.ஏ, டபிள்யூ.எச்.ஓ ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் இருந்து வந்த நிபுணர்கள் இருந்தனர்.

நிபுணர்களின் ஆலோசனையின் படி, கவனத்தில் கொள்ள வேண்டிய நிபந்தனைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

1. தகவலறிந்த ஒப்புதலுடன் கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருந்து கொடுக்கப்பட வேண்டும். 

2. பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

3. மருந்துகளை கொடுக்க தொடங்குவதற்கு முன் ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது போதைப்பொருள் தொடர்புக்கு சாத்தியமான ஆலோசனையை மருத்துவரிடம் பெற அறிவுறுத்தப்படுகிறது. பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

4. எச்.சி.க்யூ இல் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற துப்புரவுப் பணியாளர்கள் பாதுகாப்பு உடைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். சுகாதார ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளின்படி பயன்படுத்த வேண்டும். 

5. மருந்துகளை கொடுக்க தொடங்குவதற்கு முன்பு எந்தவொரு பாதகமான நிகழ்வு அல்லது போதைப்பொருள் தொடர்புக்கு சாத்தியமானவை குறித்து தங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். 

6. நோய்த்தடுப்பு பணியின்போது யாருக்காவது அறிகுறி தெரிந்தால் அவர்கள் உடனடியாக சுகாதார மையத்தை  தொடர்பு கொள்ள வேண்டும், தேசிய வழிகாட்டுதல்களின்படி பரிசோதனை செய்து நிலையான சிகிச்சை நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்று அறிகுறிகளைத் தவிர (காய்ச்சல், இருமல், சுவாச சிரமம்), வேறு ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால் ,அவர் உடனடியாக பரிந்துரைக்கும் மருத்துவரிடமிருந்து மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்.

7. ஆய்வக சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று குணடைந்து தொற்று இல்லை என்றாலும் தேசிய வழிகாட்டுதல்களின்படி வீட்டுகளில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும்.

8. அடிக்கடி கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல், குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரமாக இருத்தல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு என பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் அவர்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com