இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,25,101; பலி 3,720 ஆக உயர்வு   

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,25,101; பலி 3,720 ஆக உயர்வு   



புதுதில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் மேலும் 142 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 3,720 -ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 48,582 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, இதுவரை தொற்று பாதித்தோரில் 69,597 பேர் சிகிச்சை பெற்று வருகிறன்ரனர், 51,783 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்  3,720 பேர் பலியாகியுள்ளனர். 

தொற்று பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை   44,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,517 பேர் பலியாகியுள்ளனர், 12,583 பேர் குணடைந்துள்ளனர். அடுத்ததாக தமிழகத்தில் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர், குஜராத்தில் 13,268  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 802 பேர் பலியாகியுள்ளனர். 

தேசிய தலைநகர் தில்லியில் இதுவரை 12,319  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 208 பேர் பலியாகியுள்ளனர், 5,897 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  ராஜஸ்தான் (6,494), மத்தியப் பிரதேசம் (6,170) மற்றும் உத்தரப்பிரதேசம் (5,735). மேற்கு வங்கம் (3,332), ஆந்திரம் (2,709), பஞ்சாப் (2,029), தெலங்கானா (1,761), பிகார் (2,177), ஜம்மு-காஷ்மீர் (1,489), கர்நாடகம் (1,743) ஒடிசா (1,189), ஹரியானா (1,067). கேரளம் (732), ஜார்க்கண்ட் (308), சண்டிகர் (218), அசாம் (259), திரிபுரா (175), சத்தீஸ்கர் (172) மற்றும் உத்தரகண்ட் (153) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com