மேட்டூர் அனல் மின் நிலையம் முழு உற்பத்தியை துவங்கியது

மேட்டூர் அனல் மின் நிலையம் முழு உற்பத்தியை துவங்கியது உள்ளது. இதனால் மின்சாரம் தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
மேட்டூர் அனல் மின் நிலையம் முழு உற்பத்தியை துவங்கியது


மேட்டூர் அனல் மின் நிலையம் முழு உற்பத்தியை துவங்கியது உள்ளது. இதனால் மின்சாரம் தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நான்கு அலகுகள் செயல்பட்டு வருகின்றன.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

கரோனாபரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை மின் பயன்பாடு குறைந்ததால் 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட வந்தது.சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு தடையுத்தரவு தளர்த்தப்பட்டது. இதனால் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கின. மின் தேவை அதிகரித்ததால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி துவங்கப்பட்டது.

இன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் முழு உற்பத்தியான 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முழு உற்பத்தி நடைபெற்று வருவதால் மின்சாரம் தடையின்றி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com