அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது

அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. இன்று காலை நிலவரப்படி 97,655 பேர் கரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 53,06,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 3,40,047 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 16,45,094 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97,655 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 4.03,201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 1,24,794 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,726 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,568 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 142 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com