மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதால் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது: முருகன் குற்றச்சாட்டு

மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வரும் நிலையில் வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது என்று பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 
மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதால் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது: முருகன் குற்றச்சாட்டு

சேலம்: மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வரும் நிலையில் வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது என்று பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

பாஜக மூத்த தலைவர் கே என் லட்சுமணன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை  பாஜக மாநிலத் தலைவர் முருகன் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு  ரூ. 15,000 கோடி மதிப்பில் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளது. தமிழகத்தில் 70 லட்சம் பேருக்கு 500 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 35 லட்சம் விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கரோனா புற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது.

நாகரீகம் கருதி சந்தித்து வாழ்த்து சொன்னது குற்றம் என்று சொன்னால் அதை ஏற்க முடியாது திமுக துணைப் பொதுச் செயலாளர் வி பி துரைசாமி வருகை கட்சியினருக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. கீழ் மட்டம் வரை கட்சியை எடுத்துச் செல்ல உதவும். பல கட்சிகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பாஜகவில் சேர பேசி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com